சுடச்சுட

    

    "கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு  அனுமதி பெற வேண்டும்'

    By  பெரம்பலூர்  |   Published on : 12th March 2014 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உதவி தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது.
     இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் நாள், நேரம் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற விதிமுறைகளுக்கு உள்பட்டும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டும் அனுமதி வழங்கப்படும். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பொதுக் கூட்டங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒரு பகுதியில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த திட்டமிடும் முன், அப்பகுதியில் தடை உத்தரவு ஏதாவது உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
     பொதுவாக, இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது. காலை 6 மணிக்கு முன், இரவு 10 மணிக்கு பின் ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்களால் நடத்தப்படும் அனைத்து கூட்டங்கள், ஊர்வலங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்ட தனிக் குழுவால் விடியோவில் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai