சுடச்சுட

  

  கூட்டுறவு சங்க ஊழியர்  வீட்டில் நகை, பணம் திருட்டு

  By  பெரம்பலூர்,  |   Published on : 12th March 2014 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் திருடு போனது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.
   வேப்பந்தட்டை அருகே உள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அன்பழகன் (47). கடம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முதன்மை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
   அன்பழகன், அவரது மகள் நிகல்யாவுடன் (14), கள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் திங்கள்கிழமை தங்கியிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ஒரு பீரோவை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது.
   இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் அரும்பாவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அன்பழகன் வீட்டின் அருகே உள்ள வனப் பகுதியில் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai