சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல்:  கட்டுப்பாட்டு அறைக்கு  புகார் தெரிவிக்கலாம்

    By  பெரம்பலூர்,  |   Published on : 12th March 2014 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்.
     தமிழகத்தில் ஏப். 24-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 04328- 225023 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு புகார் மையத்தில், இதுவரை தேர்தல் தொடர்பாக 26 புகார் பெறப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai