சுடச்சுட

    

    பறக்கும் படை, வட்டாட்சியர்களுக்கு  வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

    By  பெரம்பலூர்,  |   Published on : 12th March 2014 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,தேர்தல் நடத்தை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தனிக் குழு உறுப்பினர்கள், பறக்கும் படை, வட்டாட்சியர்களுக்கான விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு தலைமை வகித்த, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் எம். சிவக்குமார் பேசியது:
     தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன.
     மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட சிறப்பு தனிக் குழு உறுப்பினர்கள், பறக்கும் படையினர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்களுக்கும், விதிமுறை நகல்கள் புத்தகமாக வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
     கூட்டத்தில் தனிக் குழு உறுப்பினர்கள், பறக்கும் படை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai