சுடச்சுட

  

  பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 6-ம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம் சிவசுப்ரமணியம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். 100 மீட்டர், 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு மற்றும் வட்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
   தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வ. பாண்டியன் பேசியது: கல்வி மாணவர்களுக்கு மனவலிமையையும், விளையாட்டு, உடல் வலிமையையும் அளிக்கிறது. உடல் வலிமை மாணவர்களுக்கு மிகவும் அவசியம். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விளையாட்டில் வெல்ல பயிற்சி எடுப்பதோடு, வாழ்க்கையிலும் வெல்ல முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர். உடற்கல்வி ஆசிரியர் எஸ். தமிழ்செல்வன், ஒருங்கினைப்பாளர் அ. மணிராசன் துறைத் தலைவர்கள் மு. சரவணன், இரா. முருகேசன், கோ. முரளிதரன், சி. நல்லசிவம், பொ. செல்வமணி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai