சுடச்சுட

  

  தமிழக பிரச்னைகள் களையப்பட ஜெயலலிதா பிரதமராக வேண்டும்

  By dn  |   Published on : 13th March 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் களையப்பட முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான என்.ஆர். சிவபதி.

  பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், செயல்வீர்கள் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

  மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சித் தொண்டர்கள் வதந்திகளை தவிர்த்து, அனைத்து நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கட்சி சின்னத்தை வரைய வேண்டும். அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். காவேரி, கச்சத்தீவு, பாலாறு, மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை களைய முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றார் அவர்.

  மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல் பேசியது:

  வரும் மக்களவை தேர்தலை இந்தியத் துணைக் கண்டமே எதிர்பார்க்கிறது. திமுகவில் உட்கட்சி பிரச்னை நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளுமே தேர்தல் களம் கண்டு பயந்துள்ளன.

  1967-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தனித்தனியாக 5 அணி போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெறும் என்றார் அவர்.

  கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளருமான டி.பி. பூனாட்சி பேசியது: அதிமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.

  எனவே, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வின்றி சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

  அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஓன்றிணைந்து, தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், பாப்பாசுந்தரம், டி. இந்திராகாந்தி, வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா ஆகியோர் பேசினர்.

  மாவட்ட அவைத் தலைவர் அ. அசோக்ராஜ், மாவட்டப் பொருளாளர் பூவை த. செழியன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியச் செயலர் எஸ். கண்ணுசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஒன்றியச் செயலர் என். கர்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் ந. கிருஷ்ணகுமார், மாவட்ட அணிச் செயலர்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், அண்ணா தொழிற்சங்கத் துணைத் தலைவர் கோவிந்தன், முன்னாள் நகராட்சி உறுப்பினர் சின்ன. ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில மீனவரணி இணைச் செயலர் பி. தேவராஜன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai