Enable Javscript for better performance
\\\"தேர்தல் அலுவலர்களுக்கு நடுநிலை தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.

    மக்களவைத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:

    பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்து அனைத்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாகக் கண்காணித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (பெரம்பலூர் - தனி), கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (குளித்தலை), லால்குடி சார் ஆட்சியர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி (லால்குடி), திருச்சி கலால் உதவி ஆணையர் ஆர். சரஸ்வதி (மண்ணச்சநல்லூர்), முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஜெய்னுலா புதின் (முசிறி), திருச்சி சிறப்பு அமலாக்க திட்டங்களுக்கான தனித்துணை ஆட்சியர் எஸ். செந்தாமரை (துறையூர்- தனி), மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ. கார்குழலி, ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் தா. மலையாளம் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai