சுடச்சுட

  

  பறக்கும்படை போல வாகனச் சோதனை செய்தவர்கள் குறித்து விசாரணை

  By dn  |   Published on : 13th March 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் அருகே பறக்கும் படை அதிகாரிகளைப் போல வந்து வாகனச் சோதனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள கோனேரிபாளையம் பிரிவு சாலை அருகே 2 இளைஞர்கள், அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்து தாங்கள் பறக்கும் படை அதிகாரிகள் எனக் கூறி சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனராம்.

  அப்போது அவ்வழியே வந்த கட்சிப் பிரமுகரின் காரை வழி மறித்து சோதனையிட வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட அவர் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தாராம். அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் 2 இளைஞர்களும் தலைமறைவாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai