சுடச்சுட

  

  பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் அ. வேணுகோபால் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், ஏஐடியூசி சங்கத்தின் மாவட்டத் தலைவருமான வீ. ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.   இதைத்தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான பி. ரெங்கராஜ் தலைமையில், பெரம்பலூர் பழ வண்டி விற்பனையாளர்கள், தரக்கடை விற்பனையாளர்கள், காய்கறி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிஐடியூ சங்கத்தை சேர்ந்த 154 உறுப்பினர்கள் ஏஐடியுசி சங்கத்தில் இணைந்தனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட கெüரவத் தலைவராக அ. வேணுகோபால், மாவட்டத் தலைவராக வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலராக பி. ரெங்கராஜ், மாவட்டப் பொருளாளராக பி. மாரிமுத்து, துணைத் தலைவராக பி. குணசேகரன், துணைச் செயலராக வி. வரதராஜ், மாவட்ட நிர்வாகிகளாக ஆர். முருகன், ஏ. வரதராஜன், ஏ. பொண்ணுசாமி, எஸ். செல்வி, உமாசங்கர், சங்கர், சந்திரா, கஜேந்திரன், சந்திரா, வெள்ளையம்மாள், அன்புசெல்வி, பாண்டியன், பி. ராமசாமி, த.மு. தங்கராசு, கே. ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏஐடியூசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் பேசினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. ராஜூ, மாவட்டச் செயலர் வீ. ஜெயராமன், மாவட்டத் துணைச் செயலர் அ. ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் கே. ஜெயராமன், எம்.என். ரெங்கராஜ், கே. சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai