சுடச்சுட

  

  வாகனச் சோதனை பெரம்பலூர் அருகே ரூ. 1.46 லட்சம் பணம் பறிமுதல்

  By dn  |   Published on : 14th March 2014 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் அருகே, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பணம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருவதோடு, தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  மேலும், பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  அந்த வகையில், பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படை வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியல் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா மகன் அபிபுல்லா உரிய ஆவணங்களின்றி ரூ. 1.46 லட்சம் தொகையை கொண்டு சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai