சுடச்சுட

  

  தேர்தல் குறித்த புகார்களை மின்னஞ்சலில் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

  Published on : 15th March 2014 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் குறித்த புகார்களை மின்னஞ்சலில் பதிவு செய்யலாம் என்றார் மாவட்டத்  தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க 6 நபர்களை உள்ளடக்கிய, 6 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

  அதன்படி, பெரம்பலூர் சட்டப்பேரவைத்  தொகுதிக்கு வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வன் (9942039690), பழனிதேவி (9787713837), ராமு (9566836057) ஆகியோர் தலைமையிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்  முருகன் (8344879387), வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் பூங்குழலி (7402607794), சேகர் (7402607754) ஆகியோர் தலைமையிலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  இதேபோல, தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 2

  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இதில், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நசீர் அஹமது (9751720605), குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் (9943360625) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  மேலும், தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தேர்தல்  கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 18004257031, 8903689581 ஆகிய எண்களில் பொதுமக்கள் தங்களது புகாரை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

  இந்நிலையில், மின்னஞ்சலில் புகார்களை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

  perambalur2014complaints@gmail.com என்ற முகவரிக்கு தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai