சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து ஜயங்கொண்டம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

  ஜயங்கொண்டம் அருகேயுள்ள கொலையனூர்  மேலத்தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (29). இவர் கடந்த 2011-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அதே பகுதியில் முந்திரி காட்டில் நடந்து சென்ற ஒரு பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றாராம்.

  இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்தனர்.

  இதுதொடர்பான வழக்கு ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  இந்நிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், இதில் ரூ. 5 ஆயிரத்தை பாதிக்கப்

  பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிபதி முத்துமுருகன் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai