சுடச்சுட

    

    பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.50 லட்சத்தை பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் பறக்கும் படையினர் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு, வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த காரை ஆய்வு செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 4.50 லட்சம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    காரில் வந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வாகையூரைச் சேர்ந்த ரெத்தினம் மகன் ஆரோக்கியராஜ் (45) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai