சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    தேனி மாவட்டம், உத்தமப்பாளையம் அருகேயுள்ள  ஆங்கூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சேகர் (38). இவர், கடந்த 12-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்கேட் அருகே தெரணி கிராமத்தில் உள்ள தங்கராசு மகன் கலியபெருமாள் (36) வீட்டுக்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து கலியபெருமாள் வீட்டில் தங்கியிருந்த சேகர், 12-ம் தேதி இரவு மது அருந்தியதாகத் தெரிகிறது. மார்ச் 13-ம்  தேதி அதிகாலை குடிபோதையில் எழுந்த சேகர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வி சித்ரா வீட்டுக்கதவை தட்டியதாகத் தெரிகிறது.

    இதனால், ஆத்திரமடைந்த செல்வி சித்ரா மற்றும் அவரது உறவினர்களான மூவாண்டி, மதியழகன், செல்வம், சுப்பிரமணி, ஜோதிவேல் ஆகியோர் சேகரை தாக்கினராம்.

    இதில், பலத்த காயமடைந்த சேகரை அவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். எனினும், அங்கு சேகர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து கலியபெருமாள் (36) அளித்த புகாரின்பேரில்,  பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி வழக்குப் பதிந்து, செல்வி சித்ரா உள்ளிட்ட 6 பேரைத் தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai