சுடச்சுட

  

  பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டத் துணைத் தலைவர் எஸ். சூசைராஜ் தலைமை வகித்தார்.

  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய செஞ்சிலுவை சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர். பிரபாகரன், புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்துப் பேசினார்.

  தொடர்ந்து மாவட்டச் செயலர் என். ஜெயராமன் பேசியது:

  பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, விழிப்புணர்வுக் கூட்டமும், மாதம்தோறும் ரத்த தான முகாமும் நடைபெற உள்ளது. கல்லூரிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை ஏற்படுத்தி, மாணவர்களை ஆக்கப்பபூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆயுள் உறுப்பினர்களை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  முன்னதாக புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

  அரியலூர் மாவட்ட மேலாண் தலைவர் ஏ. நல்லப்பன், செயலர் ஆர். பாஸ்கர், பொருளாளர் சுப்ரமணியம்,   மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க கன்வீனர் என். கலையரசன், திருநெல்வேலி மாவட்டச் செயலர் சலீம், மேலாண் குழு உறுப்பினர்கள் பி. ராமாராஜ், டி. செல்வம், துரை. சக்திவேல், வி. சின்னம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் வி. ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மேலாண் குழு உறுப்பினர் த. மாயக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.        

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai