சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து முதியவர் சாவு

    By பெரம்பலூர்  |   Published on : 17th March 2014 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்ததில் முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

    சேலம் மாவட்டம், ஆத்தூர் சீனிவாசநகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (70). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர் தனது மனைவி கலாவதியுடன் (65) திருச்சியிலிருந்து வாடகை காரில் ஆத்தூருக்கு சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவுச் சாலை அருகே வந்தபோது, காரின் டயர் வெடித்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் செல்வராஜ், கலாவதி, கார் ஓட்டுநர் ஆத்தூரைச் சேர்ந்த இளங்கோ (34) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    தகவலறிந்த ரோந்து போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai