சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமில் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது.

  தேர்தல் ஆணைய உத்தரவின்படி கடந்த 9-ம் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் குறைந்த விண்ணப்பம் பெறப்பட்ட 27 வாக்குச்சாவடி மையங்களில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  அதன்படி அ. குடிகாடு மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்ட அவர் மேலும் கூறியது:

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 590  வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற முகாம்களில் மனு பெறப்படாத, குறைந்த எண்ணிக்கையில் மனு பெறப்பட்ட வாக்குச் சாவடிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 27 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

  முகாமில் வேப்பந்தட்டை வட்டத்தில் 5 ஆண்களும், 12 பெண்களும், பெரம்பலூர் வட்டத்தில் ஒரு பெண்ணும், குன்னம் வட்டத்தில் 16 ஆண்களும், 28 பெண்களும், ஆலத்தூர் வட்டத்தில் 14 ஆண்களும், 8 பெண்களும், செந்துறை வட்டத்தில் 18 ஆண்களும், 17 பெண்களும் என 119 பேர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai