சுடச்சுட

  

  பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உள்ளூர் டிவி விளம்பரங்களைக் கண்காணிக்கும் பணியில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் மாவட்டத் தலைவராக ஆட்சியர் தரேஸ் அஹமது, உறுப்பினராக சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, செயலராக இ. சாலி தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கான அலுவலகம், ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் எல்.சி.டி மானிட்டர்கள், டிவிக்கள், செய்தித்தாள்கள் ஆகியவை உள்ளன.

  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவான தேர்தல் பிரசாரம் செய்ய முன்கூட்டியே கண்காணிப்பு குழுவிடம் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அதனடிப்படையில், உள்ளூர் டிவி மற்றும் செய்தித்தாளில் விளம்பரங்கள் வெளியிட, இக்குழுவினர் சான்றிதழ் அளிப்பர். இதன்படி, அனைத்து டிவிக்களிலும்  ஒளிபரப்பாகும் வேட்பாளரது விளம்பரங்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பர செலவை வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  மேலும், விளம்பரங்களைக் கண்காணித்து அதன் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மீடியா கண்காணிப்புக் குழு அறையில் 2 எல்.சி.டி. மானிட்டர், 2 டி.வி.க்கள் வைக்கப்பட்டு விளம்பரம் வெளிவருவதை கண்காணிக்க 4 பேர், விளம்பரம் வெளிவருவதை பதிவு செய்ய ஒருவர், குழுக் கண்காணிப்பாளர் ஒருவர் என 6 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், செய்தித்தாள் விளம்பரங்களையும் கண்காணித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai