சுடச்சுட

  

  கிராமங்களில் இருந்தாலும் உலக அறிவை எட்டலாம்

  By பெரம்பலூர்,  |   Published on : 18th March 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமங்களில் இருந்தாலும் உலகறிவை எட்டலாம் என்றார் என் வீடியா நிறுவனத் தலைவர் சிவசங்கரன் லட்சுமி நாராயணன்.

  பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 8-வது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  விழாவில் அண்ணா பல்கலைக் கழகப் பருவத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்த அவர் மேலும் பேசியது:

  கிராமங்களில் தற்போது அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளும் உள்ளதால், அங்கிருந்துகொண்டே உலகறிவை எட்ட முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பமானது உலகை மாற்றியுள்ளதால் பின்வரும் சந்ததியினர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவர்.

  பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களை நாமே உருவாக்குவதன் மூலம், தொழில்முனைவோராக விளங்க முடியும். அதன் மூலம் பல குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் முதலாளிகளாகவும் வளர முடியும். நமது நாட்டில் தரமான பொறியாளர்கள் அதிகளவில் உள்ளதால், அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பாளர்களாகத் திகழ வேண்டும் என்றார் அவர்.

  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீலராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கே. இளங்கோவன் ஆண்டறிக்கை வாசித்தார். 

  தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும ஆலோசகர் எஸ். தாயுமானவன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன், தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதல்வர் இளங்கோ, சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார், சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விமானவியல் துறைத் தலைவர் சுரேகா ரதி சாமுண்டி வரவேற்றார். மேலாண்மை துறைத் தலைவர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai