சுடச்சுட

  

  தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள்  படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

  By பெரம்பலூர்  |   Published on : 18th March 2014 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் மக்களவை தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  ஏப். 24-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் அதிகளவிலான முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள், இளநிலை படை அலுவலர் தரத்தில் உள்ள அனைவரும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 19- ஏ வார்னர்ஸ் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியில் நேரில் அணுகி, உரிய விருப்ப விண்ணப்பத்தை அளிக்கலாம். 

  மேலும் விவரங்களுக்கு 0431-2410579 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai