சுடச்சுட

  

  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

  By பெரம்பலூர்,  |   Published on : 18th March 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2013-2014-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

  பயிற்சியில் பங்கேற்ற 81 பள்ளிகளைச் சேர்ந்த 243 உறுப்பினர்களுக்கு குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, சட்டத்தில் பெற்றோரின் பங்கு, பள்ளியின் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், மேலாண்மைக் குழுவின் பணிகள், பள்ளி மேலாண்மைக் குழு கண்காணிக்க வேண்டியவை, மேலாண்மைத் திட்டம், மேம்பாட்டுத் திட்டம், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள், பள்ளியின் நிதி சார்ந்த தகவல்கள், இளைஞர் நீதிக் குழுமம், குழந்தைகள் நலக்குழு மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு உதவும் பிற துறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

  பெரம்பலூர் (கிழக்கு- மேற்கு) வட்டார வளமையம், வேலூர், செஞ்சேரி மற்றும் அம்மாபாளையம் ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சியை, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் அளித்தனர்.  அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் கு. கலாவள்ளி, உதவித் திட்ட அலுவலர் து. சுப்பிரமணியம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத், உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தேத்தரவு ஸ்டெல்லா, இ. உமையாள், கீழப்பழூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சீரங்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மு. சுதாகர், ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai