சுடச்சுட

  

  "மாணவர்கள் ஆளுமை திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

  By 'பெரம்பலூர்,  |   Published on : 18th March 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்கள் தங்களது ஆளுமைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திண்டுக்கல் மனிதவள மேம்பாட்டு வல்லுநர் பால் சுஷில்.

  பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரோட்டராக்ட் சங்க மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

  மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர வேண்டும். நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நிகழ்கின்றன. நேர்மறை எண்ணத்தால் ஆயுள் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைத்து, நல்வாழ்வு அமைகிறது. அனைத்து மனிதர்களிடமும் சமமான திறமையே அடங்கியுள்ளது. வெற்றி பெறுபவன், தன் திறமையை அதிகளவில் வெளிப்படுத்திப் பண்படுத்திக் கொள்கிறான். எனவே,  ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மற்றும் ஆளுமைத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  கல்லூரித் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் ஜான் அசோக், கல்லூரி முதல்வர் வே. அயோத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பயிற்சி முகாமில், ரோவர் கலைக் கல்லூரி மற்றும் ரோவர் பொறியியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்க மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.

  ஏற்பாடுகளை கல்லூரித் துணை முதல்வரும், ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் கோ. ரவி செய்திருந்தார்.

  ரோவர் கலைக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத் தலைவர் எஸ். நிரஞ்சனா வரவேற்றார். செயலர் பி. செல்வமணி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai