சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த வழக்குரைஞர் சின்னதுரை, கடந்த 14-ம் தேதி எசனை கிராமத்தில் நின்றிருந்தாராம்.

  அப்போது அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ், நல்லுசாமி, பிரசாந்த், அஜித்குமார், பிரபு, ராஜசேகர் ஆகியோர் சின்னதுரையை தகாத வார்த்தைகளால் பேசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜவகர் வழக்குப் பதிந்து அஜித்குமார், பிரபு ஆகியோரை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தார்.  இந்நிலையில் மீதமுள்ள 4 பேரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட 6 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் 19-ம் தேதி வரை

  வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai