சுடச்சுட

  

  பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்

  By அரியலூர்/ பெரம்பலூர்  |   Published on : 19th March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க வலை நிழற்படக்கருவி (ரஉஆ இஅஙஉதஅ)  பொருத்தப்பட்ட மடிக்கணினி (கஹல்பர்ல்) தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளதை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

  பின்னர் அவர் தெரிவித்தது: அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 67 பதற்றமான  வாக்குச்சாவடிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலிருந்து வலைநிழற்படக் கருவி (ரஉஆ இஅஙஉதஅ)  செயல்படுத்தப்படவுள்ளது.

  இணையதள தொடர்பு இல்லாத வாக்குச் சாவடிகளிலிருந்து காலை தேர்தல் நேரம் தொடக்கம் முதல் அனைத்துப் பணிகள் முடியும் வரை உள்ள நிகழ்வுகள் வலை நிழற்படக் கருவி (ரஉஆ இஅஙஉதஅ)  மூலம் மடிக்கணினியில் (கஹல்பர்ல்) பதிவு செய்யப்படும். மடிக்கணினிகளை வாக்கு மையங்களில் இயக்குவதற்கு கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

  இதற்காக அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து மடிக்கணினிகள் பெறப்பட்டுள்ளன.

  சிதம்பரம் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்க வலை நிழற்படக் கருவி (ரஉஆ இஅஙஉதஅ) பொருத்தப்பட்ட மடிக்கணினி (கஹல்பர்ல்) தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

  ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஸ்தபா கமால்பாட்சா(பொது), தாட்சாயணி (தேர்தல்),தேசிய தகவல் மைய அலுவலர்கள் பிச்சையா, பிரிட்டோ, தேர்தல் வட்டாட்சியர்  ராமன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

  பெரம்பலூர்... பெரம்பலூர் மக்களவை தொகுதியில் குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் 17 வாக்குச்சாவடிகளும், லால்குடி சட்டப்பேரவை தொகுதியில் 17 வாக்குச்சாவடிகளும், மணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளும், முசிறி சட்டப்பேரவை தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும், துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 7 வாக்குச்சாவடிகளும், பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 86 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

  பதற்றமான வாக்குச்சாவடிகளில் நிகழும் வாக்குப்பதிவை பதிவுசெய்ய தேர்தல் அலுவலர்கள் மடிக்கணினிகளை சேகரித்து வருகின்றனர்.

  பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடியின் நிலைமை, வாக்குப்பதிவு தொடங்கியது முதல், முடியும் வரை கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai