சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் கணினித் துறை சார்பில், "அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் ஆய்வரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கணினித் துறை மேலாளர் ஆர். மணிகண்டன், திறந்த மூல நிரலாக்க மென்பொருள், அதன் சேவைகள் கூகுள், நாசா போன்றவற்றில் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து விளக்கினார். தொடர்ந்து, திறந்த மூல நிரலாக்க மென்பொருள் மொழிகளான பைத்தான்,  பி.எச்.பி. குறித்து மாணவ, மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கல்லூரி இயக்குநர்கள் பி. ராஜபூபதி, பி. மணி, முதன்மை நிதி அலுவலர் ஆர். ராஜசேகர் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai