சுடச்சுட

    

    தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு

    By பெரம்பலூர்  |   Published on : 20th March 2014 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகளுக்கான பணி முன்னேற்றம், வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (பெரம்பலூர்), ராஜேந்திரன் (குன்னம்), எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மு. இந்துமதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ. கார்குழலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தா. மலையாளம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai