சுடச்சுட

  

  பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் மாரியம்மன் கோவில் புதிதாக கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

  பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் 10-வது வார்டில் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால், கோவிலை ரூ. 25 லட்சத்தில் புதுப்பித்து, இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் கட்ட அப்பகுதி மக்கள் மேற்கொண்ட முடிவின்படி, மாரியம்மன் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டது.  தொடர்ந்து, புதிய கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம பிரமுகர் ரெங்கராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர்

  ராமசாமி, நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai