Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், கணினி பொறியியல் துறை சார்பில், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். கோபி பேசும்போது, இதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்பதன் மூலம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான தகவல்களை பெறுகின்றனர். மேலும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விழிப்புணர்வு பெறுகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது தனித்திறனை மென்மேலும் வளர்த்துக்கொண்டு, அதை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.  இதில், பல்வேறு பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். துறைத் தலைவர் ஜே. சசிதேவி வரவேற்றார். உதவிப் பேராசிரியை பி. சண்முகப்பரியா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai