சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகள் மீது அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை: ஆ. ராசா

  By பெரம்பலூர்,  |   Published on : 20th March 2014 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றுத்திறனாளிகள் மீது அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா.

  பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், துறைமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தலைமை வகித்து, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபுவை அறிமுகப்படுத்தி, அவர் மேலும் பேசியது: மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது திமுக தலைவர் கருணாநிதி மிகுந்த அக்கறைகொண்டு உடனுக்குடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்.

  2 ஜி தொடர்பாக கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். அதற்கெல்லாம் கலங்காத நான், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளரின் தோல்வியை அறிந்து கலங்கினேன். எனவே, தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர். திருச்சி மாவட்டச் செயலர் கேன்.என். நேரு, தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர், மாவட்டச் செயலர் பா. துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை, புதிய தமிழகம் மாவட்டச் செயலர் எம். சிவா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்டத் தலைவர் ஏ. அல்லாபிச்சை, திராவிடக் கழக மாவட்டத் தலைவர் யு. ஆறுமுகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் ரசீது அஹமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எம். சுல்தான் மொய்தீன், எம்ஜிஆர் கழக மாவட்டச் செயலர் கலைவாணன், அகில இந்திய பார்வார்டு பிளாக் மாவட்டத் தலைவர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai