சுடச்சுட

  

  கணவரை ஏமாற்றி  இரண்டாவது திருமணம் செய்த மனைவி கைது

  By பெரம்பலூர்  |   Published on : 21st March 2014 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னம் அருகே, கணவனை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த மனைவியை போலீஸார் கைது செய்து, புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்த தர்மதுரைக்கும் (34), திருச்சி மாவட்டம், கொணலை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவிக்கும் (28) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

  இவர்களுக்கு செல்லம் (6) என்ற மகள் உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தர்மதுரை 2010-ம் ஆண்டு கீழப்புலியூர் கிராமத்துக்கு வந்தார்.

  இந்நிலையில், ஸ்ரீதேவியும், திருச்சி மாவட்டம், புறத்தாக்குடி அருகே உள்ள

  மகிளம்பாடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் (27) சமயபுரம் பகுதியில் வசித்து வந்தது தர்மதுரைக்கு தெரியவந்தது.

  இதன்பின், ஸ்ரீதேவியை   தர்மதுரை கண்டித்து மீண்டும் கீழப்புலியூர் கிராமத்துக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

  இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 50 ஆயிரம், 9 பவுன் நகை, வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியுடன் ஸ்ரீதேவி சென்றுவிட்டாராம்.

  இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் தர்மதுரை புகார் அளித்தும் எவ்வித நவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

  இதனிடையே, ஸ்ரீதேவி கிருஷ்ணமூர்த்தியை 2-வது திருமணம் செய்து கொண்டு சமயபுரம் பகுதியில் வசிப்பதாக தெரியவந்தது.

  இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்மதுரை அண்மையில் புகார் அளித்தார்.

  ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து ஸ்ரீதேவியை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai