சுடச்சுட

  

  பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா தேர்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.

  பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா செங்குணம், அருமடல், சிறுகுடல், கவுல்பாளையம், கல்பாடி, நெடுவாசல், எறையசமுத்திரம், அய்யலூர், குடிக்காடு, சிறுவாச்சூர், விளாமுத்தூர், நொச்சியம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் அதிமுகவிற்கு ஆதரவுக்கோரி வாக்கு சேகரித்தார்.

  இந்நிகழ்ச்சியில், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், மாவட்டச் செயலர் மா. ரவிச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, அரசின் சாதனை திட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர்.

  இதில், நகராட்சித் தலைவர் சி. ரமேஷ், பெரம்பலூர் நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் எம்என் ராஜாராம், இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இரா. வடிவேல், கட்சி பொறுப்பாளர் சின்ன. ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai