சுடச்சுட

  

  பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திருச்சி மாவட்ட செயலர் கே.என். நேரு ஆகியோர் முன்னிலையில், மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் (தேமுதிக) பாடாலூர் சோ. மதியழகன் உள்ளிட்ட தேமுதிக பிரமுகர்கள் திமுகவில் புதன்கிழமை இணைந்தனர்.

  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினரான சோ. மதியழகன் உள்ளிட்ட தேமுதிக பிரமுகர்கள், பெரம்பலூர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அலுவலகத்தில் திமுகவில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் ஆ. ராசா, கே.என். நேரு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்டச் செயலர் பா. துரைசாமி, குன்னம் தொகுதி எஸ்.எஸ். சிவசங்கர், ஆலத்தூர் ஒன்றியச் செயலர் என். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் க. அண்ணாதுரை, வேப்பூர் ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai