சுடச்சுட

  

  பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் விடியோ படக்காட்சி மூலம் குறும்பட விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

  நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில்

  கூடும் பிரதான இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

  தேர்தலில் நேர்மையுடன் வாக்களிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதை உணர்த்திடும் வகையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மேடைப் பேச்சு, கிராமிய பாடல் அடங்கிய தொகுப்பு மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பற்றிய சிறப்பு பேட்டிகள் ஆகியன தேர்தல் ஆணையத்தால் தயாரித்து வெளியிடப்பட்டவை.

  இந்த விடியோ படக்காட்சியை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai