சுடச்சுட

  

  மேலப்புலியூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முற்றுகை

  By பெரம்பலூர்  |   Published on : 21st March 2014 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ஆர்.பி. மருதராஜா செங்குணம், அருமடல், சிறுகுடல், கவுல்பாளையம், கல்பாடி, நெடுவாசல், எறையசமுத்திரம், அயிலூர், குடிக்காடு, சிறுவாச்சூர், விளாமுத்தூர், நொச்சியம், லாடபுரம், அம்மாபாளையம், மேலப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை காலை முதல் வாக்கு சேகரித்தார். இந்நிலையில், வேட்பாளர் மருதராஜா, முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வாக்கு சேகரிக்க திறந்த ஜீப்பில் மேலப்புலியூர் கிராமத்துக்குச் சென்றார்.

  அப்போது, அந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு மேலப்புலியூர் கிராமத்தின் அதிமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவர் செல்லம், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் மேலப்புலியூரில் டாஸ்மாக் கடை நடத்துவதுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, வேட்பாளர் மருதராஜாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai