சுடச்சுட

  

  தையல் பயிற்சி பெற்ற 120 பெண்களுக்கு சான்றிதழ்

  By பெரம்பலூர்,  |   Published on : 22nd March 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரியில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும்

  விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு தொழில்நுட்பக் கல்லூரி  முதல்வரும், முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அ. சுப்பாராஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர் எம். அருண்பிரசாத் முன்னிலை வகித்தார்.

  விழாவில் இலவச தையல் பயிற்சி பெற்ற 120 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கிய தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் பேசியது: மத்திய அரசின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரோவர் தொழில் நுட்பக் கல்லூரியின் விரிவாக்க மையங்களில் எலந்தலப்பட்டி, சத்திரமனை, அம்மாபாளையம், வாலிகண்டபுரம், அய்யலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 120 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பெற்ற பெண்கள் சான்றிதழ் பெற்றதோடு இருந்துவிடாமல், சுயதொழில் தொடங்க முயற்சிக்க வேண்டும். அதன் மூலம், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்றார். இதில், அலுவலக மேலாளர் கே. சீனிவாசன், சமுதாய மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கத்துறை ஆசிரியர்கள் எம். சம்பூர்ணம், சி. வசந்தி, விஜயராணி, வனஜா, காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  சமுதாயத் திட்ட ஆலோசகர் எஸ். குமாராகிருஷ்ணன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai