சுடச்சுட

  

  "புகார் மையத்தில் 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன'

  By பெரம்பலூர்,  |   Published on : 22nd March 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையத்தில், இதுவரை 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடந்த 5-ம் தேதி முதல் தேர்தல் நடைத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  மேலும், தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

  இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800-4257031 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக, அல்லது 8903689581 என்ற எண்ணிலும், ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்2014ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அதனடிப்படையில், 24 மணி நேரமும் இயங்க க் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வேண்டியும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்தும் 85 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில், 83 புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai