சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்.15 வரை விழிப்புணர்வு பேரணி

  By பெரம்பலூர்  |   Published on : 22nd March 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவை பொது தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணிகள் ஏப். 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், வாரச்சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

  கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

  அதனடிப்படையில், மார்ச் 25-ம் தேதி சிறுவாச்சூர் மற்றும் பாடாலூர் பகுதிகளில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், 28-ம் தேதி வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளும், ஏப். 1-ம் தேதி குன்னம் பகுதியில் கீழமாத்தூர் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளும், 4-ம் தேதி லாடபுரம் மற்றும் அம்மாபாளையம் பகுதியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், 8-ம் தேதி அரும்பாவூர் பகுதியில் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளும், 11-ம் தேதி செட்டிக்குளம் பகுதியில் கீழக்கனவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளும், 15-ம் தேதி வாலிகண்டபுரம் பகுதியில் எளம்பலூர் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகளும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் எளம்பலூர் பொதிகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளும் விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai