சுடச்சுட

  

  "பொதுமக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  By பெரம்பலூர்,  |   Published on : 22nd March 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செஞ்சுருள் சங்க மாணவர்கள்  பொதுமக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறையின் திட்ட மேலாளர் டாக்டர் கே. இளங்கோவன்.

  பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா  பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற செஞ்சுருள் சங்கம் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

  மாணவர்கள் ரத்த தானம் செய்து, நாட்டுக்கு  பெருமை சேர்ப்பதோடு, கல்லூரியில் பயிலும் போதே ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். சமுதாயத்தில் சிறந்த மாணவர்களாக விளங்க வேண்டும்.

  மேலும், பொதுமக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 2 முறை ரத்த தானம் செய்து மக்களுக்கு நல உதவி செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து, பெரம்பலூர் மாவட்டத்தை எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.

  விழாவுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் ம. சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

  இதில் கல்லூரி முதல்வர் சந்திரசூடன், முன்னால் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ. செல்வராஜ் உள்பட செஞ்சுருள் சங்க மாணவர்கள் பங்கேற்றனர்.

  கல்லூரி செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் த. செல்வம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் இ. பல்தசார் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai