சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், பயோ மெடிக்கல் துறை சார்பில் பொறியியல் துறையின் சிறப்பம்சங்கள் குறித்த  கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கல்லூரி முதல்வர் சி. நடராஜன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் கருத்தரங்கை தொடக்கிவைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, பெங்களூரு நிமான்ஸ் நரம்பியல் ஆராய்ச்சியாளர் எம். நிர்மலா, நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் நிலவரம் குறித்து விளக்கிப் பேசினார். துறைத் தலைவர் சி. நாராயணன் அறிமுக உரையாற்றினார். கருத்தரங்கில், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் பி. மணி, பி. ராஜபூபதி, நிதி அலுவலர் ஆர். ராஜசேகர் மற்றும் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே. கார்த்திக் பாபு வரவேற்றார். உதவி பேராசிரியர் சத்தியா சாலமன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai