சுடச்சுட

  

  வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி

  By பெரம்பலூர்,  |   Published on : 22nd March 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூரில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் சட்டப்பேரவைத்  தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சார் ஆட்சியருமான ப. மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

  பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வரும் மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து, தங்களது சட்டத்துக்கு உள்பட்டு சாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடுகளை களைந்து நேர்மையுடன் வாக்களிக்க உறுதி ஏற்க வேண்டும்.

  வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பிச் சென்றனர்.

  பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் தொடங்கிய பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, கனரா வங்கி பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு வழியாகச் சென்று சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

  குரும்பலூர் பாராதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் பெரம்பலூர் ரோவர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன், கண்காணிப்புக் குழுச்  செயலர் இ. சாலிதளபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கார்குழலி, வட்டாட்சியர்கள் செல்வம் (தேர்தல் பிரிவு), முத்தையன் (பெரம்பலூர்), பேரணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai