சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் முத்தையா (53), விவசாயி. இவர், வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது விவசாய நிலத்துக்கு தண்ணீர்ப் பாய்ச்சுவதற்காகச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால்,  சந்தேகமடைந்த அவரது மனைவி கலையரசி வயலுக்கு சென்று

  பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

  தீக்காயமடைந்த பெண் சாவு: பெரம்பலூர் சங்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் தெருவைச்  சேர்ந்த செல்லதுரை மனைவி உஷா (31). இவருக்கு, கடந்த சில நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட வலியால்  அவதிப்பட்ட உஷா, மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து அவர், பெரம்பலூர்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

  இதுகுறித்து அவரது சகோதரர் நல்லேந்திரன் மகன் சுரேஷ் (32) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai