சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜாவை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் ஊராட்சிக்குள்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நீண்ட காலமாக செய்து தரப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

  இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா, ஆலத்தூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது, அந்தக் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வேட்பாளரை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  வேட்பாளருடன் இருந்த பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், ஆலத்தூர் ஒன்றிய அதிமுக செயலர் என்.கே. கர்ணன், ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரா. வெண்ணிலா உள்ளிட்டோர் மற்றும் பாடாலூர் போலீஸார்  பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடத்திய பேச்சுவார்த்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுமென உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள், முற்றுகை போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai