சுடச்சுட

  

  பெரம்பலூரில் சர்வதேச ரோட்ராக்ட் சங்க வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

  ஆண்டுதோறும் மார்ச் மாதம் சர்வதேச ரோட்ராக்ட் வாரம் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நிகழாண்டிற்கான வாரம், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் சார்பில்  நடைபெற்றது.

  கடந்த ஒரு வாரமாக கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ், ரோவர் மற்றும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி இன்ட்ராக்ட் மாணவர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி முகாம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் சாத்தனூர் கல் மரம், ரஞ்சன்குடி கோட்டையை ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் கண்டுகளித்தனர். செஞ்சேரி வித்யாஸ்ரம் பள்ளியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது.  

  அதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு நிபுணர் பால் சுஷீல், ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்களுக்கு ஆளுமைத்திறன் குறித்த பயிற்சியளித்தார். பின்னர், துறையூர் பெருமாள் மலையடிவார ரோட்ராக்ட் சங்கத்துடன் இணைந்து அவர்களின் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

  நிறைவு விழாவில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், சிறப்பாகப் பணியாற்றிய ரோட்ராக்ட் சங்க மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முதல்வர் வெ. அயோத்தி வாழ்த்தினார்.

  நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் ரோட்டரி தலைவர் எஸ். குணசேகரன், செயலர் பி. ஜெயபிரகாஷ், ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி. ஜான் அசோக், புதிய தலைமுறை ரோட்டரி தலைவர் சி. சுரேஷ், செயலர் பி.எம். சத்தியசீலன், ரோட்டரி இயக்குநர்கள் ஜெ. அரவிந்தன்,  ஜெ. கார்த்திக், டி. ரமேஷ், ஜி. பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

  ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வரும், ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் கோ. ரவி செய்தார்.கல்லூரி ரோட்டராக்ட் சங்கத் தலைவர் எஸ். நிரஞ்சனா வரவேற்றார். செயலர் பி. செல்வமணி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai