சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் பொதுமக்களின் பார்வைக்காகவும், செயல்முறை விளக்கத்திற்காகவும் வாக்களிக்கும் இயந்திரங்கள் திங்கள்கிழமை (மார்ச் 24) வரை வைக்கப்படும் என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  பொதுமக்களின் செயல்முறை விளக்கத்திற்காக பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான பகுதிகளில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளுக்கு தலா 1 வாக்குப் பதிவு இயந்திரமும் என மொத்தம் 10 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.

  இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பொதுமக்களுக்கு முறையாக காட்சிப்படுத்த பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.கே. தாண்டவமூர்த்தி (9443186787), பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து (7402607800),  வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் (7402607804), ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் (7402607793), வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டேன்லி செல்வக்குமார் (7402702617) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

  குரும்பலூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் சுந்தரம் (9894685428), அரும்பாவூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் ஆறுமுகம் (9442779585), பூலாம்பாடி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் குமரன் (9486426303), லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு செயல் அலுவலர் சேமசுந்தரம் (8883100456), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சசிக்குமார் (9894574688) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  எனவே, சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களது பகுதியில், எந்த இடத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.        

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai