சுடச்சுட

  

  விருப்பத்தோடு படித்தால் கணிதம் எளிதாக இருக்கும் என்றார் கோவை காருண்யா பல்கலைக் கழக கணிதவியல் துறைப் பேராசிரியர் பி. இளவரசன்.

  பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜி. ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராசிரியர் பி. இளவரசன் பேசியது:

  அன்றாட வாழ்வில் கணிதம் முக்கியமாக உள்ளது. மாணவிகள் கணிதத்தை கடினமானது என்று நினைக்காமல் விருப்பத்தோடு படித்தால், அந்தப் பாடம் சுலபமாக இருக்கும். எனவே, கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவிகள் கல்வி பயில வேண்டும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியை, இளங்கலை கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி சுகன்யா தொகுத்து வழங்கினார்.

  இதற்கான ஏற்பாடுகளை, கணித துறைத் தலைவர் எஸ். தீபா, உதவி பேராசிரியைகள் சுமதி, யமுனா, பாரதி, நதியா, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இளங்கலை கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி வனஜா வரவேற்றார். மாணவி சரண்யாபாய் நன்றி கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai