சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

  பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மணி (38). லாரி ஓட்டுநரான இவர், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகரில் தங்கி உள்ளார். இந்நிலையில், மணியும் அவரது நண்பருமான அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22), பெரம்பலூரிலிருந்து தண்ணீர் பந்தலுக்கு செல்வதற்காக பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையின் தடுப்புச் சுவரில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மாரிமுத்து பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  கிரஷர் ஆலை தொழிலாளி சாவு: 

  திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் நடேசன் மகன் முரளி (38). இவர், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் பேரளி கிராமம் அருகே உள்ள கிரஷர் ஆலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு நான்கு சாலை சந்திப்பு அருகே மோட்டார் செக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். 

  இந்த விபத்துகள் குறித்து புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு:

  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் தங்கவேல் (46). இவர், சனிக்கிழமை இரவு ஆலத்தூர் கேட் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதுகுறித்து அவரது உறவினர் ராம்குமார் (35) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.       

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai