சுடச்சுட

  

  பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 170 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

  பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பாண்டிச்சேரியை சேர்ந்த புல் சிஸ்டம் சார்பில் நடத்தப்பட்ட வளாக நேர்காணலை, கல்லூரி முதல்வர் ஏ. சுப்பாராவ் தொடக்கி வைத்தார். முகாமில், பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி, ஆதி சங்கரர் பாலிடெக்னிக் கல்லூரி, எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

  மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர் தமிழ் அழகன் ஆகியோர், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் 170 மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

  அந்த மாணவர்களுக்கு, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினார்.

  நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வி. ஜான் அசோக், துணை முதல்வர் எம். அருண்பிரசாத், ஆட்டோ மொபைல் துறைத் தலைவர் எம். அரங்கசாமி, எலக்ட்ரிக்கல் துறைத் தலைவர் எம். சுப்ரமணியன், நிர்வாக அலுவலர் சீனிவாசன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் சிவக்குமார், ருத்தீஸ் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.                       

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai