சுடச்சுட

  

  ஏப். 11, 12, 15-ல்பி.எட். பட்டதாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

  By பெரம்பலூர்  |   Published on : 25th March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றியமைக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில், பி.எட் பட்டதாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் ஏப். 11, 12, 15 தேதிகளில் நடைபெறுகின்றன.

  இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  2013ம் ஆண்டு நடைபெற்ற பி.எட் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போது மாற்றியமைக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் குறைந்தபட்சம் 82 முதல் 89 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் ஏப். 11, 12, 15-களில் நடைபெற உள்ளது.

  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர் முன்னிலையில் குழுக்கள் அமைத்து நடைபெற உள்ளது. பெரம்பலூரில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலு முன்னிலை வகிக்கிறார்.

  இதில் பங்கேற்கும் பணி நாடுநர்கள் தங்களது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 2, பட்டப் படிப்பு, கல்வியியல், மற்றும் சாதிச் சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில், தகுதியுடைய அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai