சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 107 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

  தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கடந்த 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்காளர் அடையாள அட்டைக் கோரி 7 பேரும், பணம் பட்டுவாடா குறித்து 2 பேரும், அரசியல் கட்சி விளம்பரங்கள் குறித்து 95 பேரும், அரசியல் கூட்டங்கள் தொடர்பாக 2 பேரும், அரசுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒருவரும் என தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து 107 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 105 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசியல் கட்சி விளம்பரங்கள் தொடர்பாக பெறப்பட்ட 2 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai