சுடச்சுட

  

  ஸ்டாலின் பேச்சைக் கேட்க முடியாத பெரம்பலூர் திமுகவினர்!

  By பெரம்பலூர்,  |   Published on : 25th March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மு.க. ஸ்டாலின் பேச்சைக் கேட்க சுமார் 6 மணி நேரமாகக் காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட மீன்சுருட்டி, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், வி. கைகாட்டி, கீழப்பழூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரமும், இரவு 8 மணிக்கு குன்னத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதற்காக குன்னம்- அந்தூர் சாலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிகளவு கூட்டம் இருக்க வேண்டுமென கருதிய திமுகவினர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்களை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வாகனங்களில் அழைத்து வந்தனர். மாலை 4 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை எதிரே, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரை கட்சி நிர்வாகிகள் நாற்காலியில் அமர வைத்தனர்.

  கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களில் பெரும்பாலானோர் உற்சாக பானத்தில் இருந்ததால், பெண்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனிடையே, மேடையில் பேசிய நிர்வாகிகள் இன்னும் சிறிது நேரத்தில் மு.க. ஸ்டாலின் வந்து விடுவார் என தெரிவித்துக் கொண்டே இருந்தனர். இரவு 8 மணியிலிருந்து 5 நிமிஷத்துக்கு ஒருமுறை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மு.க. ஸ்டாலின். தொல். திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர் என மைக் மூலம் தெரிவித்தனர். ஆனால், இரவு 10 மணி வரை முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததால் விரக்தியடைந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் செல்லத் தொடங்கினர். 

  இந்நிலையில் மீன்சுருட்டி, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், வி. கைகாட்டி, கீழப்பழூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு 10.05-க்கு மேடைக்கு வந்த மு.க. ஸ்டாலின், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு சைகை மூலம் வாக்களிக்குமாறு கோரி விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

  இதனால் சுமார் 6 மணி நேரமாகக் காத்திருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai